Search This Blog

Showing posts with label முத்துக்கு முத்தாக... Show all posts
Showing posts with label முத்துக்கு முத்தாக... Show all posts

Thursday, September 11, 2025

 

தமிழ் , இசை,  குரல் - மூன்றும் முத்தான பாடல்


படம்: மைதிலி என்னைக் காதலி               பாடல்: ஒரு பொன்மானை  

இசை, கவிதை: டி. ராஜேந்தர்                                  குரல் :  எஸ்.பி.பி


ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

சலங்கை இட்டாள் ஒரு மாது…சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்… அதை காண்பதில் எந்தன் பரவசம்…

1.  தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
    தாமரை பூ மீது விழுந்தனவோ… 
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
    படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

     காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கு
     இருகால்கள்  இருகால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்…
    
     ஜதி என்னும் மழையினிலே 
     ரதி இவள் நனைந்திடவே… அதில் 
     பரதம்தான் துளிர் விட்டு
     பூப்போல பூத்தாட 
     மனம் எங்கும் மணம் வீசுது… எந்தன் 
     மனம் எங்கும் மணம் வீசுது...

2.  சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்.....
     அரங்கேற அதுதானே உன் கன்னம்…
     மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
     நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

     இடையில் பின் அழகில் இரண்டு குடத்தைக் கொண்ட…
     புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

     கலை நிலா மேனியிலே 
     சுளைப் பலா சுவையைக் கண்டேன்…
     அந்த கட்டுடல் மெட்டுடல் உதிராமல் சதிராடி…
     மதி தன்னில் கவி சேர்க்குது…எந்தன் 
     மதி தன்னில் கவி சேர்க்குது……
.

Friday, April 25, 2025

ஆடல் கலையே தேவன் தந்தது

தமிழ் , இசை,  குரல் - மூன்றும் முத்தான பாடல்


படம்: ஶ்ரீராகவேந்தர்          பாடல்:  ஆடல் கலையே தேவன் தந்தது

இசை: இளையராஜா,    கவிதை: வாலி    குரல் :  ஜேசுதாஸ்


ஆடல் கலையே தேவன் தந்தது ; 
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது;

1. மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் 
    மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள் 

    வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும் பைங்கிளி
    மான் கூட்டம் மயங்கத் தாவித் தாவித்தான் வந்தாள் 

2. சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் 
    சிற்றிடைதான் கண்பறிக்கும் மின்கொடியோ 

    விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
    பெண்ணெனக் காலெடுத்து வந்ததோ உலா 

    முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
    முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ 

    தலைசிறந்த கலைவிளங்க நடைபுரியும் பதுமையோ புதுமையோ
    சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸ்வரம் வருமோ
    
    குரல்வழி வரும் அணிமொழியொரு சரசபாஷையோ
    ஸ்வரங்களில் புதுசுகங்களைத் தரும் சாருகேசியோ  

----