Search This Blog

Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, April 25, 2025

போலாவா விட்டல.....

துக்காராம் மராத்திய மொழியில் இயற்றிய "போலாவா விட்டல..... " என்ற அபங்கத்தின் தமிழாக்கம்.   

காட்சி எல்லாம் விட்டலன்

பேச்செல்லாம்   விட்டலன்

செயலெல்லாம் விட்டலன்

நினைவெல்லாம் விட்டலன்

நிம்மதி நிறைந்தது -மனதில் 

நிரந்தரம் ஆனது


பந்தங்கள் அறுந்தன

பாவங்கள் தொலைந்தன

பரிவு மிகுந்தது - மனதின்

பாரம் குறைந்தது

வேட்கை அகன்றது

வெகுளி  மறைந்தது

விட்டலன் வந்தான்- மனதில்

விட்டலன் வந்தான் 

துக்காவின் விட்டல, விட்டல .....


( பிழை பொறுத்தருள்க ).