Search This Blog

Friday, April 25, 2025

இசைத்தாய்

 இசைத்தாய்

பக்திப் பாடல்
கேட்டால் இது
இறையின் இசை
என்று ஒலிக்கும்

 உந்தன்பாடல்
எல்லாம் இவன்
இசையின் இறை
என்று பறையும்

இசைச்சேர்க்கையின்
இமயம் என்றார்
உன்னை
இடை இசையின்
சிகரம் என்றார்

ஒன்று ஒன்றாய்
அரிந்ததில்லை
ஒன்றையுமே நான்
அறிந்ததில்லை

தெரிந்ததெல்லாம் உன்
திரை இசை
வியந்ததெல்லாம் உன்
உணர்விசை
மயக்கும் உந்தன்
குரலிசை
இனிக்கும் நீ அமைத்த
விரலிசை

 

பொதுவாய்க் கொடுக்கும்
பொதுவாம் இறைவன்
புவிக்கு இசையைப்
பொதுவாய்க் கொடுத்தான்

மேற்கென்றார் கிழக்கென்றார்
ராப்பென்றார் பாப்பென்றார்
ராக்கென்றார் ரோலென்றார்
ஜாசென்றார் ப்ளூசென்றார்
நாட்டுப்புற பாட்டென்றார்
இந்துஸ்தானி கர்நாடகம்
சிம்பனி இன்னும்பல பிரிவு

 

பிரிவு மேதைகள்
பலப்பலர்
பிரிவில் அடங்காப்
மேதை நீ
இத்தனை வகைகளில்
எந்தஇசை கேட்டாலும்
உந்தன் இசை நிழலாடும்
அந்தப்பாடல் போல்
என்று நயம்நாடும்

அயல்நாடு என்றாலும்
அடுப்படியி்ல் நின்றாலும்
பயணத்தில் சென்றாலும்
படுக்கையிலே இருந்தாலும்
தொடுவதும் தொடர்வதும்

அன்னக்கிளி
முதல் 
இன்றுவரை...
இன்னும் பல தசாப்தங்கள் வரை...

இனிய இசை
இளைய இசை


ராஜராகங்கள்
ரகரகமாய் ராகங்கள்
ரசரசமாய் பாவனைகள்
தளர்வில்லாத “ஹிட்லிஸ்ட்”
முடிவில்லாத "ப்ளேலிஸ்ட்”



இசைத்தாய் எங்கும்
இசைத்தாய் என்றும் 
இசைந்தார் யாரும் 
அவர் உணர்வின் 
 இசைத்தாய் நீயன்றோ !!! 




No comments: